Wednesday, March 26, 2014

மஞ்சள் இருக்க அஞ்சேல்!

ஞ்சளை 'ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.
அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த முத்தான மூலிகை மஞ்சள். இதன் அறிவியல் பெயர், 'கர்க்குமா லாங்கா’ (Curcuma longa). இதில் உள்ள 'கர்க்குமின்’ (Curcumin)  என்ற வேதிப் பொருள்தான் மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாகவும் விளங்குகிறது. மஞ்சளின் மருத்துவக் குணங்கள்பற்றி சித்த மருத்துவர் வீரபாபு விளக்கமாகப் பேசினார்.
'கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும்; சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம். கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது. விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும். கஸ்தூரி மஞ்சள் அழகுக்காகப் பயன்படுத்தப்படுவது.  
 காய்கறி, கீரையுடன் மஞ்சளைச் சேர்த்துச் சமைக்கும்போது, புழு, பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.
 மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.
 மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.
 வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும். மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும்போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்.
வீக்கத்தைக் குறைக்கும். காயங்களை ஆற்றும்.
 புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
 அருகம்புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி, இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்துவர சில நாட்களில் தொல்லை நீங்கும்.
 மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளிப் பிரச்னையும் சரியாகும்.
 பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.
 குளவி, தேனீ போன்றவை கொட்டினால், வலி - கடுப்பு ஏற்படும். மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்; வலி குறையும்.
 தீப்புண் ஏற்பட்டால் சிறிது வெங்காயச் சாற்றுடன் மஞ்சள்தூளைக் குழைத்துப் பூசினால் குணமாகும்.
சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால் வயிறு உப்புசம் சரியாகும்.
 சம அளவு மஞ்சளையும் மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால், பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும். தலைவலி குணமாகும்.
மஞ்சளையும் சந்தனத்தையும் சம அளவில் அரைத்துப் பருக்களின் மீது தடவிவந்தால், சில நாட்களிலேயே பருக்கள் மறைந்துவிடும்.
 அடிபட்ட காயங்களின் மீது மஞ்சளைப் பூச, ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும்.
மஞ்சள் பூசினால் முடி உதிருமா?
'பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிப்பதால்தான் அவர்களது முகத்தில் மீசை, தாடி வளர்வதில்லை’ என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு. இதனால் ஆண்கள் முகத்தில் மஞ்சள் பூசப் பயப்படுவார்கள். ஆனால், மஞ்சளுக்கும் முடி உதிரலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை. பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது என்பது ஹார்மோன்களால் ஏற்படுவது.
பிறகு ஏன் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள்?
மஞ்சள் ஓர் அழகுசாதனப் பொருள். சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. எனவேதான் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு அந்தப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக மஞ்சள் சேர்க்கப்பட்ட அழகு க்ரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். காசு அதிகம் கொடுத்து ரசாயனங்களுடன் சேர்க்கப்பட்ட மஞ்சளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையாகக் கிடைக்கும் மஞ்சளைப் பயன்படுத்தியே அழகைப் பெறலாமே!

Reference: http://goo.gl/btraiw

இயற்க்கை வைத்தியம்

உலக சரித்திரத்தின் படி, அதிகமாக வெளிநாட்டினவர்களால் தாக்கப்பட்ட தேசங்களில் ஒன்று நமது பாரத தேசம். காரணம் பழங்காலத்தில் செல்வமும் செழிப்பும் செறிந்த நாடாக இருந்தது நமது இந்திய தேசம். அது மட்டுமல்ல, இந்தியாவில் விளையும் வாசனை திரவியங்களுக்காகவே கடல் வழி வர்த்தகமும், தாக்குதலும் நடந்து வந்தன.
இந்தியாவின் வாசனை திரவியங்கள் புகழ் பெற்றவை. உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமன்றி, பல உடற்கோளாறுகளுக்கு கை மருந்தாக பயனளிப்பவை. குறிப்பிட்ட வாசனை பொருட்கள் அடங்கிய அஞ்சனம் (அஞ்சறைப்) பெட்டி இல்லாத சமையலறையே கிடையாது எனலாம். இந்த பெட்டியில் அடங்குபவை – மிளகு, சீரகம், பெருங்காயம், கடுகு, வெந்தயம். இவை தவிர மஞ்சள் பொடி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி முதலியனவும் சமையலறையில் இருக்கும் வாசனைப் பொருட்கள். இவற்றினால் சாதாரண உடல் பாதிப்புகளை குறைக்க முடியும்.
மிளகு
இந்தியாவுக்கே உரித்த, இந்தியாவில் தோன்றிய பொருள். மிளகு ஒரு கொடி இனத் தாவரம். இது படர கொழு, கொம்பு, மரம் தேவை. இதன் பழங்களை உலர வைத்து கருமிளகும், வெண்மிளகும் தயாரிக்கப்படுகின்றன. பழுக்காத காய்களை உலர வைத்து கருமிளகும், பழுத்த பழங்களை நனைய வைத்து, மேல் தோலை நீக்கி, வெண் மிளகும் எடுக்கப்படுகின்றன. சரித்திர வரலாற்றின் படி, உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான வாசனை திரவியம் மிளகு. வருடத்திற்கு 75,000 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில்  விளையும் மிளகுக்கு மதிப்பு அதிகம்.
பயன்கள்
உள்ளுக்கு மருந்தாக – மிளகு காரமும், கைப்பும் நிறைந்திருப்பதால், உள்ளுக்கு சூடு தரும். பசியை தூண்டி ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். உமிழ்நீரை சுரக்க செய்வதால், உணவின் சுவை உணர்வுகளை அதிகப்படுத்தும். எனவே எல்லா வித ஜீரணக் கோளாறுகளுக்கும், வயிற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கும் நல்ல மருந்து. வயிற்றுக் கோளாறுகளுக்கு, மிளகை பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க வயிற்றுப் பொருமல், தொற்று, அஜீரணம் குறையும். கல்லீரல், குடல் இவை நன்றாக இயங்கும்.
ஜலதோஷம், இருமல், ஆஸ்த்மா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு மிளகு கஷாயம் நல்லது. மிளகை நெய்யில் பொரித்து சாப்பிட வறட்டு இருமல் நிற்கும். ஊசி முனையில் மிளகை குத்தி, நெருப்பில் காட்டி, அதன் புகையை மூக்கினுள் செலுத்தி, உறிஞ்சினால், மூக்கடைப்பு நீங்கும்.
மிளகுப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் குறையும். வெல்லத்தை நீரில் கொதிக்க வைத்து எடுத்து குளிர வைக்கவும். தேனையும், மிளகையும் சேர்த்து கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும். தொண்டை புண்ணுக்கு மிளகுத்தூள், மஞ்சள்தூள், தலா 1/2 தேக்கரண்டி எடுத்து ஒரு கப் பாலில் கலந்து குடிக்கலாம்.
முன் மண்டைத் தலைவலி, நீர்க்கோர்வை இவற்றுக்கு, மிளகு போட்டு காய்ச்சிய எண்ணெய்யை தேய்த்து, குளித்து, புளியில்லா பத்தியத்துடன் இருந்தால் நிவாரணம் கிட்டும்.
சர்மத்தில் ஏற்படும் எரிச்சலுக்கும், சீழ் வடிவதற்கும் மிளகுக் கஷாயம் நல்லது. தோலின் பல அலர்ஜி தடிப்புகளுக்கு மிளகை சாப்பிட்டு வரலாம்.
மிளகு விஷங்களை முறிக்கும்.
குளிருடன் கூடிய ஜுரத்திற்கு, மிளகு கஷாயம் குடித்தால் ஜுரம் தணியும்.
வெளி உபயோகத்திற்கு
சர்ம நோய்களுக்கு – மிளகை நீரில் அரைத்து அல்லது எண்ணெய்யுடன் சேர்த்து அரைத்து களிம்பாக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.
பல் வலி, பல் கூச்சம், ஈறுவலி இவற்றுக்கு மிளகுப் பொடி சிறந்தது. பல் சொத்தையில் மிளகுப் பொடி.
மிளகு, வெங்காயம், உப்பு இவற்றை அரைத்து தலையில் புழுவெட்டுள்ள இடத்தில் பூசி வர, அங்கு முடி முளைக்கும்.
சீரகம்
இதன் பெயரை பிரித்தால் – சீர் + அகம் – உடலின் உட்புறத்தை சீராக வைக்கும் என்று பொருள் படும். சீரகம் மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் தோன்றியிருக்கலாம். ஆனால் தொன்று தொட்டு இந்தியாவிலும் சீனாவிலும் பயிரிடப்பட்டு வருகிறது.
சீரகச் செடி ஒரு சிறிய, 1/2 அடி வளரும் செடி. சீரகத்தில் 5 வகைகள் உண்டு. அவை – நற்சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு), கருஞ்சீரகம், காட்டு சீரகம் மற்றும் பளப்பு சீரகம். முதல் இரண்டு வகைகளும் சமையலில் பயன்படுத்தப்படுபவை. அடுத்த இரண்டும் மருந்துகளாக பயனளிப்பவை. கடைசி ரகம் காரம் நிறைந்த வெளிநாட்டு சரக்காகும்.
சீரகத்தின் வீட்டு மருத்துவ உபயோகங்கள்
உள்ளுக்கு – மிளகைப் போலவே வயிற்றை சீரகம் சீராக வைக்கும். பசியின்மை, பிரட்டல், வாந்தி, வயிறு உப்புசம் (கேஸ் – வாய்வு) மலச்சிக்கல், ஏப்பம், வயிற்றுப் பூச்சிகள் இவற்றை போக்கும்.
பசியெடுக்க – சீரகத்தை எலுமிச்சை சாறில் ஊற வைத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இதை பொடியாக்கி தேனுடன் (அ) சர்க்கரையுடன் கலந்து 5 கிராம் தினம் இரு வேளை சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும். இதை வாந்தி நிற்கவும் கொடுக்கலாம்.
ஐந்து கிராம் சீரகத்தை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி கஷாயமாக்கவும். இதை வடிகட்டி, வெது வெதுப்பான சூட்டில் குடித்து வந்தால், மலச்சிக்கல் அஜீரணம், வாய்வுத் தொல்லை, இவை விலகும்.
குழந்தை பிறந்த பின், தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க 1/2 டீஸ்பூன் சீரகம் தேன் (அ) வெல்லத்துடன் கொடுத்து வரலாம். வயிற்றுக் கோளாறுகளும் சீராகும். சீரகப் பொடியை பால் (அ) நெய்யுடன் கொடுத்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
ஐந்து கிராம் சீரகத்தால் செய்யப்பட்ட கஷாயத்தை தினம் இருவேளை, 10 நாள் சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட ஜுரம் குறையும். குளிர் ஜுரத்தில் ஏற்படும் நடுக்கத்தைப் போக்க 3 கிராம் சீரகத்தை வெற்றிலையில் சுருட்டி வாயில் அடக்கிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மெல்லவும்.
சீரகத்தை, இஞ்சி, தனியாவுடன் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் தீராத தலை வலியும் தீரும். அளவுகள் சீரகம், தனியா, தலா அரை டீஸ்பூன். இஞ்சி இரு சிறிய துண்டுகள். கஷாயம் தயாரிக்க தண்ணீர் ஒரு டம்ளர்.
வெய்யில் கால நீர்ச்சுருக்கு எரிச்சலை போக்க – ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி மிதமான சூட்டில் குடிக்கவும். சிறுநீரக கற்கள் நீங்க சீரகப் பொடியை சர்க்கரையுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
வெளிப்பூச்சுக்கு
சீரகத்தை பொடித்து களிம்பாக்கி முகத்தில் தடவ, முகம் பொலிவடையும். களிம்பை, தோல் வீக்கங்களுக்கும், வலிக்கும் இடங்களிலும் தடவலாம்.
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் முகத்தை கழுவ, முகம் மாசு மருவின்றி பிரகாசிக்கும். அரிப்பு, நமைச்சல், இவற்றுக்கும் சீரகத் தண்ணீரை ஊற்றி கழுவலாம்.
பெருங்காயம்
பெருங்காய செடிகள் இமயமலை பிரதேசங்களிலும், காஷ்மீரிலும் விளைகின்றன. இதன் பெரிய வேர்கள் மேல் பாகத்தில் 6 அங்குல சுற்றளவு உள்ளவை. பெருங்காய செடி 4 – 5 வருடம் வளர்ந்த பின், இதன் தண்டு மற்றும் வேரையும் கீறி விட்டால் பெருங்காய பிசின் கசியும். அதை எடுத்து மண் பாண்டங்களில் பக்குவப்படுத்தி காய வைத்து கிடைக்கும் பொருள் பெருங்காயம்.
பயன்கள்
பெருங்காயத்தை ஒரு துணியில் கட்டி, வீட்டின் ஒரு மூலையில் கட்டி தொங்க விடுவது பழங்கால பழக்கம். இதன் வாசனை, வியாதிகளை விரட்டும் என்ற நம்பிக்கை.
உள்ளுக்கு
வாயுக் கோளாறுகளுக்கு பெருங்காயம் சிறந்த மருந்து. நெய்யில் வறுத்து கொடுக்க, பசி எடுக்கும், வயிறு உப்புசம் குறையும். வயிற்று வலி குறையும். வாயுத் தொல்லைக்கு ஒரு டம்ளர் மோரில் ஒரு கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி உப்பை கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும். ஜீரண சக்தியை தூண்டும். பெருங்காயப் பொடியை எண்ணையில் வறுத்து அதை எலுமிச்சை இலைகளோடு கலந்து விழுதாக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை பெருங்காயம் போக்கும்.
ஆஸ்த்மா, தொடர் இருமல் பாதிப்புக்கு சிறிய அளவு பெருங்காயம், 2 டீஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் வெங்காய சாறு, வெற்றிலைச் சாறு ஒரு டீஸ்பூன் – இவற்றை கலந்து குடிக்கலாம்.
சிறுநீர் சரியாக போகாவிட்டால், 5 கிராம் பெருங்காயத்தை நெய்யில் வறுத்து எடுத்துக் கொண்டால் சிறுநீர் சுலபமாக பிரியும்.
பெண்களின் மாத சுழற்சி கோளாறுகளை சீர் செய்கிறது.
ஆண்மை குறைபாடுகளுக்கு பெருங்காயம் ஒரு சிட்டிகை எடுத்து தேனுடனும், ஒரு டீஸ்பூன் ஆலமர பிசினுடன் கலந்து காலையில் தினமும் ஒரு தடவை வீதம் 40 நாட்கள் எடுத்து வந்தால் பலன் கிடைக்கும்.
குறிப்பு
வெளிப்பூச்சுக்கு
வாய்வுக் கோளாறு காரணமாக வரும் வயிற்று வலிக்கு – பெருங்காயப் பொடியை தண்ணீரில் கலந்து, சுட வைத்து வயிற்றில் தடவ, வலி குறையும்.
பெருங்காயம் + சுக்கு – சம அளவு எடுத்து, பொடித்து, தண்ணீரில் விட்டு அரைத்துக் கொள்ளவும். இதை சூடாக்கி, இளம் சூட்டில் வலி இருக்கும் மூட்டுப் பகுதிகளில் தடவவும். இதை தொடர்ந்து சில நாட்கள் செய்யவும்.
வெந்தயம்
வெந்தயம் சிறந்த மருத்துவ பயன்களை உடையது. ஆயிரக்கணக்கான வருடங்களாக சமையலிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீரையும் விதையைப் போலவே சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பயனாகிறது. வெந்தய செடியின் விசேஷம் என்னவென்றால் தான் வளர்ந்த பூமிக்கு திரும்பவும் நைட்ரஜன் உரத்தை காத்து வைக்கும் நன்றியுள்ள தாவரம். ஒன்று (அ) இரண்டடி உயரம் வளரும்
பயன்கள்
அ. உள்ளுக்கு நிறைந்த நார்ச்சத்து இருப்பதாலும், இதில் உள்ள லவணசாரம் என்ற பொருளால் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்பதாலும், வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. 10 (அ) 20 கிராம் வெந்தயத்தை உணவுக்கு 5 (அ) 10 நிமிடங்களுக்கு முன்பு அல்லது உணவுடன் சாப்பிட்டு வர, இரத்த சர்க்கரை அளவு குறையும். டயாபடீஸால் ஏற்படும் ஆண்மை குறைவுக்கு – வறுத்து பொடித்த வெந்தயப் பொடி – 2 டீஸ்பூன், அரை ஸ்பூன் சீரகம், தனியா பொடி – 1 டீஸ்பூன் – சேர்த்து உட்கொள்ளுதல் பயனளிக்கும். வெந்தயத்தை முளை கட்டி உபயோகித்தால் பயன்கள் அதிகம். வெந்தயப் பொடியை 2 டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடித்து வருதல் நீரிழிவு நோயாளிக்கு நல்லது.
அசதி, களைப்பு, உடல் வலி, மறைய வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
பசியை தூண்டும், வயிறு உப்புசம், வாய்வுக் கோளாறுகளுக்கு வெந்தயப் பொடி, பெருங்காயம் இரண்டிலும் 1/2 தேக்கரண்டி எடுத்து மோரில் கலக்கி குடிக்கலாம்.
உடல் சூடு, உடல் காங்கை குறைய இரவில் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை காலையில் குடித்து வரவும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனைக்கு, மஞ்சள்பொடி கலந்த வெந்தய கஷாயத்தால் கழுவினால் குணமாகும்.
வெந்தய கஷாயம் நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
தொண்டைப்புண், வாய்ப்புண்களுக்கு வெந்தய இலை விதைகளால் செய்த கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளிக்கலாம். தினம் 2 (அ) 3 முறை செய்யலாம்.
பிரசவித்த தாய்மார்களின் தாய்ப்பால் பெருக உதவும் அரிசியில் உளுந்து கலக்காமல், ஆறுக்கு ஒன்று என்ற அளவில் (அரிசி 6 பாகம், வெந்தயம் 1 பாகம்) வெந்தயம் அல்லது தோசை மாவு செய்து புளிக்க வைத்து அதில் தோசை வார்த்து தாய்மார்களுக்கு கொடுப்பது வழக்கம்.
இரண்டு தேக்கரண்டி வெந்தயம் (அ) சிறுகட்டு வெந்தயக்கீரையை அரிசியுடன் சமைத்து சிறிது உப்பு சேர்த்து உண்டு வர, ரத்த சோகை மறையும். உடலில் இரும்புச்சத்து சேரும்.
தூக்கம் வர வெந்தயகீரை சாற்றுடன் (2 டீஸ்பூன்) ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தூங்கப்போகும் போது குடிக்கவும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போக – வெந்தயத்தை பொடித்து, சம அளவு வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து சிறு உண்டைகளாக உருட்டி சாப்பிட்டு வர வேண்டும். இதை மாத விளக்கு ஏற்படும் முந்தைய நாட்களிலிருந்து சாப்பிட்டு வர வேண்டும்.
(ஆ) வெளிப்பூச்சுக்கு
இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் விழுதாக அரைத்து தலையில் தடவிக் கொள்ளவும். இதை வாரம் 2 (அ) 3 முறை செய்தால் பொடுகு மறையும்.
உடல் வீக்கம் புண்களுக்கு வெந்தய களிம்பை சிறிது சூடாக்கி தடவினால் குறிப்பு: உதிரப்போக்கு உள்ளவர்கள், அதிக உதிரப்போக்கு நோய்கள் உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும்.
கடுகு
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. இது அனைவரும் அறிந்த பழமொழி. கடுகு சிறியதானாலும், உணவிற்கு அது ஊட்டும் மணம், சுவை பெரிது.
கடுகு சிறு செடி வகை, உயரம் 0.5 மீட்டரிலிருந்து 1.3 மீட்டர் வரை இருக்கும். இலைகள் கோள வடிவில், நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். விதைகள் சிறியதாக, உருண்டையாக, சிவப்பு, பழுப்பு, கருநிறங்களில் இருக்கும். இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் பயிரிடப்படுகிறது. கடுகில் மூன்று வகை உண்டு. அவை சிறிய செங்கடுகு (கருங்கடுகு) பெரிய செங்கடுகு, வெண் கடுகு.
சமையலில் கடுகு தாளிதம் செய்வதற்கு இன்றியமையாதது ஒரு வாசனைப் பொருள் தாளிக்கவில்லையென்றால், நமது சாம்பார், ரசம், களி இவை முழுமையான சுவையை பெறாது. கடுகில்லாமல் நம் நாட்டு சமையலைறகள் இருக்காது. கரண்டியில் சிறிது எண்ணையைக் காய்ச்சி, 1 தேக்கரண்டி கடுகு போட்டால், அது வெடித்து காரசாரமான நெடியை வெளிப்படுத்தும். அப்படியே எண்ணையை கடுகுடன் தாளிதம் செய்ய வேண்டிய சாம்பார், ரசம், கறி இவற்றில் கொட்ட வேண்டியது தான்.
ஊறுகாய் போன்றவற்றுக்கும் கடுகு சேர்க்கப்படுகிறது. கடுகிலிருந்து எடுக்கப்படும் கடுகெண்ணை தான் வட இந்தியாவில் முழுக்க முழுக்க சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணை.
பயன்கள்
வெளிப்பூச்சுக்கு – கடுகெண்ணை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி  பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.
கடுகை அரைத்து பற்றுப் போட வலிகள் குறையும். ஆனால் எரிச்சல் தொடர்ந்தால் பற்றை அகற்றவும். அதிகமான பற்று கொப்புளங்களை உண்டாக்கும்.
கடுகு ஜீரணத்தை மேம்படுத்தும்.
எனவே அஜீரணத்திற்கு, கடுகு நல்ல மருந்து தான்.
ஆனால் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால், பேதியை தூண்டிவிடும்.
சரும நோய்களுக்கு கடுகு நல்ல மருந்து. படர் தாமரை (ஸிவீஸீரீ கீஷீக்ஷீனீ) போக, கடுகை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.
ஒரு டீஸ்பூன் கடுகை பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து வடிகட்டி, கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் விக்கல் நீங்கும்.
சித்த வைத்தியத்தில் கடுகு
சித்த வைத்தியம் சொல்லும் கடுகின் குணங்கள்.
வாந்தியுண்டாக்கும்
வெப்பமுண்டாக்கும்
கொப்புள மெழிப்பி
சர்மத்திற்கு வெப்பமூட்டும், அரிப்பை தோற்றிவிட்டு மேலும் தீவிரமான தசை வலிகளை குறைக்கும்.
ஜீரணம் உண்டாக்கும்
சிறுநீர் பெருக்கி
இருமல், மூக்கில் நீர் வடிதல், விக்கல், கோழை, வயிற்றுவலி, கீல்
வாயு, செரியாமை, தலைசுற்றல் இவற்றை போக்கும்.
கடுகின் குறைபாடுகள்
கடுகை பச்சையாக சேர்த்தரைத்த உணவுப் பொருட்கள் வயிற்றில் வேக்காளத்தை உண்டாக்கும். கடுகுக் கீரை 
ஜீரணத்தை பாதிக்கலாம். இதை தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உபயோகிக்க வேண்டும்


Reference: http://goo.gl/C60HSV

Sunday, March 23, 2014

அருகம்புல்

அதிசய பலன்கள் நிறைந்த அருகம்புல்

அருகம்புல் அதிசயமான மருத்துவ குணங்களைக்கொண்டது. அதன் தாவரவியல் பெயர்: சினோடன் டாக்டிலோன். அருகு, பதம், தூர்வை போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. மனிதனின் பிணி நீக்கும் மூலக்கூறுகள் அதில் அதிகம் இருந்தாலும், அருகம்புல் காணும் இடமெல்லாம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. 

எல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த அருகு சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடும். ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தில் நீர் பட்டால், உடனே செழித்து வளரத் தொடங்கி விடும். 

இந்த புல் உள்ள நிலம் மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் காக்கப்படுகிறது. அதனால், நெல் சாகுபடி செய்யும் போது அருகம் புல்லால் வரப்பு அமைக்கப்படுகிறது. மங்கள நிகழ்ச்சிகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அரு கம்புல் சொருகி வைக்கப்படுகிறது. சாணத்தில் சாதாரணமாக 2 நாட்களில் புழுக்கள் உருவாகி விடும். 

ஆனால் புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக்கவனிப்பதில்லை. புல் வகைகளின் தலைவர் என்று அருகுவை சொல்லலாம். அதனால்தான் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் சொல்வார்கள். 

'அருகுவே! புல் வகைகளில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆவேன்..’ என்று முடிசூடும் போது மன்னர்கள் கூறுவது அந்த காலத்து வழக்கம். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லை போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது. 

அது மூட நம்பிக்கை அல்ல, கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள். ‘அருகை பருகினால் ஆரோக்கியம் கூடும்' என்கிறது சித்த மருத்துவம். இதை 'விஷ்ணு மூலிகை' என்றும் சொல்கிறார்கள். 

பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குரு மருந்து' என்றும் அழைக்கிறார்கள். அருகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. அருந்தினால் நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படும். 

அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை கட்டுப்படும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. 

இதன் அருமையை நம்மை விட வெளிநாட்டினர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம். 

இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்லும்போது, பாலில் அருகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானத்தையும் அருகம்புல்லில் தயாரிக்கலாம். 

தளிர் அருகம்புல்லை கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்சி, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உட்கொண்டு வந்தால் எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறி விடும். 

Reference: http://goo.gl/CPJjvI

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் 

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்: 

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம். 

* உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது. 

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது. 

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.

Reference:http://goo.gl/KFtRcZ

அருகம்புல் - இஞ்சி ஜூஸ்

அருகம்புல் - இஞ்சி ஜூஸ்தேவையான பொருட்கள்: 

இளசான அருகம்புல் - ஒரு கட்டு 
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன் 
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன் 
தேன் - ஒரு கரண்டி  
இஞ்சி - சிறு துண்டு 
உப்பு - 1/2 சிட்டிகை 

செய்முறை: 

• இஞ்சியை தோல் சீவி வைக்கவும். 

• அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைக்கவும். 

• அரைத்த கலவையை நன்றாக வடிகட்டி அதனுடன் எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு, ஐஸ் சேர்த்துப் பருகவும். 

Reference: http://goo.gl/fCINad













பொதுவான நோய் அறிகுறிகளும் மூலிகை மருத்துவமும்

காய்ச்சல்


காய்ச்சலில் பல வகைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், தொடர்காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காய்ச்சல் அதிகமாகி குறைதல் ஆகியவை காய்ச்சலின் வகைகளுள் சிலவாகும். 

காற்று மூலம் பரவக்கூடிய சாதாரண காய்ச்சலுக்கு இன்புளூயென்சா என்று பெயர். பாக்டீரியா தொற்றின் காரணமாக மார்பு சளி, உடலில் சீழுடன் கட்டி ஆகியவை காரணமாக தொடர் காய்ச்சல் ஏற்படலாம். கொசு காரணமாக மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவை கொசுக்களில் பரவுகின்றன. 

நோய்க்கிருமி உடலில் நுழைந்து பெருகி ரத்தத்தில் கலக்கும்போதுதான் வெளிப்பொருள் உடலில் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது. 

இன்புளூயன்சா: 

இது சாதாரண காய்ச்சல், காய்ச்சல் உள்ள ஒருவர் தும்மும்போது அவருக்கு அருகில் ஆரோக்கியமாக உள்ளவருக்கு காற்றுமூலம் 
இக்காய்ச்சலுக்கான கிருமி உட்சென்று பரவுகிறது. 

இக்காய்ச்சல் வரும்போது மூக்கிலும், கண்ணிலும் நீர் வடியும். உடல் வெப்பம் 104 டிகிரி வரை செல்லும். நோயாளியால் நோயின்போது இயல்பாக இருக்க முடியாது. 

மலேரியா காய்ச்சல்: 

சுத்தமற்ற தண்ணீரினால்தான் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கிராமப் புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. நகர்ப்புறங்களில் நீர்த்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. 

அறிகுறி: 

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாகக் கடுமையாகும். சில மணிநேரம் இடைவெளிக்குள் இந்த மூன்று கட்டங்களும் உடலில் வெளிப்படும். முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும். காய்ச்சல் இருக்காது. இரண்டாவது கட்டத்தில் சட்டையை கழற்றி எறியும் அளவிற்குக் காய்ச்சல் இருக்கும். உடனடியாகக் காய்ச்சல் சிறிது இறங்கி வியர்வை வரும். மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும். 

போர்வையை உடல் முழுவதும் போர்த்திக் கொள் ளும் அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்படும். அத்துடன் விட்டு விட்டுக் காய்ச்சல், தலை வலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும். 

டைபாய்டு: 

இது ஒரு பாக்டீரியா காய்ச்சல். சுத்தமற்ற உணவை சாப்பிடுவதால் வரு கிறது. இந்நோய்க்கிருமி குடலில் தங்கி பல்கிப்பெருகி நச்சுத் தன்மை மிக்க திரவம் உற்பத்தியாகிறது. இத்திரவம் ரத்த்தில் கலப்பதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். மூச்சுக்காற்று சூடாக இருக்கும். சில சமயம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். 

தேவையான மூலிகைகள்: 

வேப்பிலை, கண்டங்கத்திரி, கீழாநெல்லி, வில்வம் ஆகியவற்றை பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒன்றரை ஸ்பூன் எடுத்து காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளும் சாதாரண நீரில் கலந்து உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சுமார் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தொடர்ந்து உண்ண வேண்டும். சுமார் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். தீராத பட்சத்தில் மூலிகை மருத்துவரின் ஆலோசனையை நாடவும்.

ஆஸ்துமா
இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அறிகுறிகள்: 
மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும். 
காரணங்கள்: 
தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந் துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம். 
மூலிகைகள்: 
வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும். 
இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். 
பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும். 

வாசனை வைத்தியம்
மலர்களில் பல வண்ணமுண்டு. இதில் சில மணமூட்டிகள். சில மயக்கமூட்டிகள் இதனை கண்டுணர்ந்தவர்கள் தான் நறுமண சிகிச்சையை உண்டாக்கினார்கள். வாசனை பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட திரவங்கள் எசன்ஷியல் ஆயில் என்றழைக்கப்பட்டது. இந்த எண்ணெய்களுக்கு அபூர்வமான மருத்துவ ஆற்றல் உண்டு. ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியலுக்கும், மசாஜாற்கும் பயன்படும் எண்ணை போன்ற இந்த வாசனை எண்ணெயும் மருத்துவ குணம் உண்டு. இந்த எண்ணெய் பல விதமான பூக்களை பிழிந்து எடுக்கப்பட்ட சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை ஆவியாக்கி புகை மூட்டுவதன் மூலம் அறையிலுள்ள கிருமிகளை விரட்டலாம். இந்த புகையை சுவாசிப்பதன் மூலம்  புத்துணர்ச்சியை பெறலாம். நாம் அன்றாடம் குளிக்கும் போது தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டுக் கலந்து குளிக்க உடம்பு சுத்தமாவதுடன் இதில் கிடைக்கும் சுகமும் அலாதியானது. இந்த நறுமண எண்ணெயை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடம்பில் பூசிக்கொண்டால் தோல் பளபளப்பாக இருக்கும்.
எசன்ஷியல் ஆயிலை வெதுவெதுப்பான  நீரில் விட்டு கலந்து ஒத்தடம் கொடுத்தால் தசைவலி, மூட்டுவலி, தசை பிடிப்பு போன்றவை மறையும். இன்று பல பியூட்டிஷியன்கள் இந்த நறுமண எண்ணெயை பயன்படுத்தி தான் பலர் பளபளப்பாகின்றனர். அரோமா ஆயில், எசன்ஷியல் ஆயில், நறுமண எண்ணெய் என்று இதற்கு பல திருநாமம் உண்டு.
இந்த அரோமா ஆயிலை தினமும் காலில் தடவி வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் வரும் கேடுகள் வராமல் எச்சரிக்கையாக இருக்கலாம். இந்த அரோமா ஆயில் இன்று பல மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது. இந்தநறுமண ஆயிலானது முடிசம்மந்தமான பாதிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக இருக்கும். முடி கொட்டுதல், முடி உதிர்தல், இள நரை, பித்த நரை, பொடுகு பாதிப்பு, பேன் தொல்லை, தலை அரிப்பு போன்றவைக்கு இந்த ஆயிலை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
மல்லிகை, ரோஜா, லாவண்டர் போன்ற பூக்கள் சந்தனம் போன்ற மரக்கட்டைகள், எலுமிச்சை, ஆரஞ்சு, இஞ்சி போன்றவற்றின் சாற்றை வடித்து அரோமா தெரபியில் பயன்படுத்துகிறார்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எசன்ஷியல் ஆயிலை பயன்படுத்தி, அரோமா தெரபியில் தலைவலி, உடல்வலி, அலர்ஜி முதல் தோல் பிராப்ளம் வரை பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.
லாவண்டர்தான் மனதுக்கும், உடலுக்கும் நிம்மதி தரச் சிறந்தது. மல்லிகைப் பூ மனதை மயக்குவதோடு, நிம்மதியும் சந்தோஷமும் தரும். சந்தன வாசனையை நுகர்ந்தால் மனம் துடைத்து விட்டது போன்ற நிறைவும், சந்தோஷமும் உணர்வோம். எலுமிச்சை புத்துணர்ச்சி தருவதோடு, வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கும் நல்லது. ஆரஞ்சு தோல் சாறு உடலைப் பாதுகாப்பாக்குவதோடு, மலச்சிக்கலையும் தவிர்க்கும்.  இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. இந்த எண்ணெய்கள் பொதுவாக எல்லாக் கடைகளிலும் கிடைக்கின்றன. நமக்குப் பிடித்த அல்லது தேவையான எண்ணெய்யை வாங்கி, நாமே அரோமா தெரபி செய்யலாம்.
எல்லா எண்ணெயும் எளிதில் ஆவியாகக்கூடியது. ஓவ்வொன்றும் ஓவ்வொரு சூழ்நிலையை உருவாக்கவல்லது. தேவையான ஆயிலைத் தேர்ந்தெடுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் இளஞ் சூடான நீர் நிரப்பி, அதில் நான்கைந்து துளி வாசனை எண்ணெய் ஊற்றுங்கள். நன்றாக கலக்கி விடுங்கள். பாத்திரத்தை முகத்தின் அருகே கொண்டுபோய், மூச்சை உள்ளிழுத்து வாசனையை நுகருங்கள் அல்லது இந்த பாத்திரத்தில் காலை வைத்திருங்கள். பூவின் மணமும் அதன் பலனும் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பரவும் போது சுகமாக இருக்கும். நம் உடலின் நரம்பு முடிச்சுகள் அத்தனையும் உள்ளங்காலில் இருப்பதால், இது அதிகப்பலனைத் தரும்.
மனம் சோர்வாக இருப்பதாக தோன்றினால், பிடித்த வாசனை எண்ணெய் நிறைந்த பாட்டிலை மூக்கின் அருகே கொண்டு சென்று முகருங்கள். காது, மடல்களிலும், லேசாகத் தேய்த்துக் கொள்ளலாம். உணர்வு நரம்புகள் நிறைந்த காதில் தேய்ப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.
மசாஜ்
வாசனை எண்ணெயை ஆல்மண்ட் ஆயில், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு வெஜாடபில் ஆயிலுடன் கலந்து மசாஜ்செய்யலாம்.
சனி நீராடு என்பார்கள், உச்சந்தலையில் எண்ணெயை ஊற்றி அழுந்தத் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பது நல்ல் பழக்கம். உடம்பில் உள்ள சூடு தணியும். மூக்கு நுனியில் உள்ளங்கையை வைத்து விரல் நுனி தலையில் படும் இடத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அங்கிருந்து மூன்று விரல் இடைவெளி விட்டு, மறுபடி எண்ணெய் தேய்க்க வேண்டும். இப்படி பின்னந்தலை வரை தேய்த்தால் நல்ல் பலன் கிடைக்கும். வாசனை எண்ணையின் மணமும், குணமும் உடம்பின் சூடு டென்ஷனை போக்கி உற்சாகமும் தரும்.
புருவத்தின் மேலும் கீழும் நெற்றியிலும் நடுவிலிருந்து ஆரம்பித்து பக்கவாட்டில் மசாஜ்செய்யலாம். விரல்களை லேசாக அழுத்துவது முக்கியம். நேரம் கிடைத்தால், உடல் முழுவதும் மசாஜ்செய்வதும் நல்லது. முகத்தில் மசாஜ்செய்வதனால் மோவாய்யிலிருந்து மேல் நோக்கி பத்து முறை மசாஜ்செய்ய வேண்டும் நெற்றிப் பொட்டில் கடிகாரச் சுற்றுப்படி பத்து முறையும் எதிர்த்திசையில் பத்து முறையும் வட்டமாகத் தேய்க்கவேண்டும்.
கழுத்து முதுகுப் பகுதிகளில் மசாஜ்செய்யும் போது, உள்ளங்கையை அழுத்திச் செய்யலாம். விரல்களை மடக்கிக் கைகளை  மூடி, தோள் பட்டை எழும்புகளை லேசாக அழுத்திப் பிடித்து மசாஜ்செய்யலாம். கால்களை துணி பிழிவது போல் உருட்டி பிசைந்து கொடுக்கலாம். உள்ளங்கால்களைப் பலரும் மறந்து விடுவோம், ஆனால் அவற்றை மசாஜ்செய்வது மிகவும் முக்கியம். பொதுவாக இதயத்தை நோக்கிய திசையில் மசாஜ்செய்வது தான் நல்லது. தோளுக்குமேல் மசாஜ்செய்யும் போது கீழுநோக்கியும் மசாஜ்செய்ய வேண்டும். விரல் நுனிகளைப் பிடித்து லேசாக அமுக்க வேண்டும்.
உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் அதற்குரிய விதத்தில் மசாஜ்செய்த பின், கை-கால்களை  உதறவேண்டும். உடலில் உள்ள முக்கியமான மையங்களில் முறையாக அழுத்தும் போது, உடல் டென்ஷன் ரிலிசாகிறது. ரத்த ஓட்டம் சீராகவும் உடல் வலி தீரவும் மசாஜ் கை கொடுக்கும் வாசனையின் நறுமணமும், குணமும், உடலுக்கும், மனதுக்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகின்றது.
வாசனை செய்திகள்
வாசனை என்றவுடன் நம் மூக்கின் ஞாபகத்திற்கு வருவது பூக்கள்தான். இது பூக்களுக்கு இயற்கை அள்ளித் தந்த பம்பர் பரிசு. சரி இந்த வித விதமான வாசனையை எப்படி உணர்திறன் மனிதன்? நமது உடம்புக்குள் நம்மை அறியாமல் நரம்புகளுக்கும் மூளைக்குமிடையே ஒரு தகவல் பறிமாற்றுப்பணி நடைபெறுகிறது. நமது மூக்குப்பகுதியில் இருக்கும் சட்கான்ஸ் விர்ஷ் என்கின்ற உணர்வு நரம்புகள் வழியாக வாசனையானது மூளையின் நியூட்ரான் செல்களை அடைந்து, வாசனையை உணர செய்கின்றன. நல்ல உணர்வுகளை தூண்டுபவைகளை வாசனை என்றும் அருவருப்பை தூண்டுபவைகளை நாற்றம் என்று குறிப்பிட்டாலும் புத்துணர்ச்சியை, உற்சாகத்தை ஏற்படுத்தும் சக்தி வாசனைக்கு உண்டு. இந்த சக்திக்கு வில்வாட் என்று பெயராகும். இயற்கையான வாசனை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும். ஆனால் செயற்கையான மணம் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதனால் சிலருக்கு தலை வலிக்கும். இதற்கு காரணம் செயற்கை மணத்தை யூரோபில்ட்ஸ் என்கின்ற ரசாயணம் கலந்து தயாரிப்பதுதான். இந்த ரசாயணம் தான் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது. இவர்கள் செண்ட் வகைகளை தவிர்ப்பது நல்லது

Reference: http://goo.gl/8IcRm1

மூலிகை நீர்

சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.
ஆவாரம்பூ நீர்
“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
கரிசாலை நீர்
சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.
செம்பருத்தி நீர்
செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
நன்னாரி நீர்
“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
துளசி நீர்
குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,
தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.
வல்லாரை நீர்
யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.
Reference: http://goo.gl/u6xeAQ

சித்த மருத்துவக் குறிப்புகள்

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
——————————————————————————–
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
——————————————————————————–
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
——————————————————————————–
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
——————————————————————————–
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
——————————————————————————–
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
——————————————————————————–
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
——————————————————————————–
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
——————————————————————————–
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
——————————————————————————–
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
——————————————————————————–
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
——————————————————————————–
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
——————————————————————————–
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
——————————————————————————–
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
——————————————————————————–
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
——————————————————————————–
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
——————————————————————————–
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
——————————————————————————–
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
——————————————————————————–
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
——————————————————————————–
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

Reference: http://goo.gl/Bbx4dx

பரம்பரை வீட்டு வைத்தியம்

அஜீரணசக்திக்கு
அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
அம்மைநோய் தடுக்க!
அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.
அறுகம் புல்
இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.


அம்மைநோய் வேகத்தை தணிக்க!
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.
அகத்திக்கீரை
உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.
ஆறு சுவையின் செயல்!
காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கசப்பு – உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.
இனிப்பு – உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
புளிப்பு – இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
துவர்ப்பு – இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
உப்பு – ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்
அன்னாசிப்பழம்
இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.
அரைக்கருப்பன் சரியாக!
இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.

ப்பாசிப்பழச்சாறும் பசுப்பாலும் கலந்து பூசிலாம் தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்து பூசினால்குணமாகிவிடும்,
ஆசனவாசலில் குடைச்சலுக்கு-இப்படியான அரிப்பு வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவரகளுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்ரில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும் அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும்.. கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால. அரிப்பு குணமாகும்.
ஆரோக்கியத்திற்கு!
தேகஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி,யோகாசனம் செய்தால் ஆரொக்கியம் கிடைக்கும்.
ஆண்கள் மலடு தீர!
ஆண்களுக்கு அவரது இந்திரியத்தில்-ஈஜீஎப்| (EGF) என்னும் இரசாயனச்சத்து குறைவதால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு இந்த ரசாயனச்சத்தை மருத்துவர் மேற்பார்வையில் பாவித்தால் மலடுதீரும். எமது சித்தரகள் அறிவுறுத்தலுக்கு அமைய யோகாசனம் செய்தாலும் குறிப்பாக ஹலாசனம், சர்வாங்காசனம், சற்பாசனம் சாந்தி ஆசனம் ஆகியவற்றை தினம் செய்தால் சிலநாட்களில் நற்பயன் கிடைக்கும்.
ஆண்மை வலுப்பெற!
அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.
இசைமருத்துவம்!
இன்றையநவீனவிஞ்ஞானமுறைப்படி மேல்நாடுகளிலும்,சீனா,ஜப்பான்போன்ற நாடுகளிலும்  இசையைப்பயன்படுத்துகின்றனர். சிலநோய்களுக்கு தகுந்த இசையை தேர்ந்தெடுத்து அதை இசைத்தட்டில் பாடவைத்து நோயாளிமட்டும் கேட்ககூடிய செவிக்கருவியில்பொருத்தி தினம் சில நேரங்கள் அந்த இசையைச்செவிமடுக்க வைப்பாரகள். இந்த இசை மருத்துவம அமோகவெற்றியளிப்பதாக நம்பப்படுகிறது. எமது மூதாதையர் பலநோய்களையும் குணமாக்க திருவாசகம் போன்றசுவையான பாடல்களை பயன்படுத்துனர் என்பது எம்மவர் அறிந்ததே. இப்போதுதான் நமது நவீனவிஞ்ஞானிகள
இந்த உண்மையை கண்டறிந்திருக்கின்றனர. இனியாவது எம்மவர் இதைநம்பி இசையை நோய்கள் தீரப்பயன்படுத்தட்டும்.
இரத்தம் பெருக!
இரத்தம் உடம்பில் விருத்தியாக அதிகம் கீரை உணவுகள் பழவகைகள் தினம் போதிய நீர் அருந்துதல் அவசியம்.. இறைச்சி,ஈரல்,மீன்முதலியவை அதைஉண்பவருக்கு உடன்இரத்தம் விருத்தியாக உதவும். தக்காளனிப்பழமும் -பீறுறூற்|இரத்த உற்பத்திக்கு உதவக்கூடியவை. தினம் உடற்பயிற்சியும் இடைவிடாது நடப்பதும் இரத்தவிருத்திக்கு உதவும். பாதாம் பருப்பு பாலுடன் உண்பதால் இரத்தவிருத்தி உண்டாகும். அத்திப்பழத்துடன் பாலும்சேரத்து அருந்துவதும் இரத்த விருத்திக்கு உதவும்.
இளநீர் மருத்துவம்!
இளநீரில் தாதுப்பொருள்களாகிய இரும்பு, பொற்ராசியம், சுண்ணாம்புச்சத்து, சோடியம் ஆகியவை அதிகம் இருப்பதால் சிறுநீரக நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் பெரிதும் உதவும். குடலில் புளு பெருகுவதையும் குறைக்க வல்லது.
Reference: http://goo.gl/jmTy20